Contact Us
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Iste quaerat autem corrupti asperiores accusantium et fuga! Facere excepturi, quo eos, nobis doloremque dolor labore expedita illum iusto, aut repellat fuga!
- (+94) 0764881117
- (+33) 0605909270
- thuyarpahirvu@gmail.com
மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்
உங்கள் உறவுகள், நண்பர், அயலவர்களின் இறப்பின் போதான தகவலை உலகமெங்கும் வாழும் உங்கள் உறவுகளை சென்றடைய TAMILVISIONS இன் thuyarpahirvu.com அறிவித்தல் இடுங்கள். இது உங்களுக்கு இலகுவானதாகவும் மலிவானதாகவும் . நிதி நிலைமை கருதி சிலவேளைகளில் இலவசமானதாகவும் கிடைக்கும். இணைய அறிவிப்புக்களின் பயன் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்காகவே எமது இம்முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது இந்தச் சேவையின் பயன்களை பெற்றுக்கொள்ள பயனாளர் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம், மேலும் தகவல் தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும். தேவையானவை
தேவையானவை
- இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் தீபத்தின் வடிவில் படம் காட்சிப்படுத்தப்படும்)
- அறிவித்தலுக்குரிய முழுத் தகவல் உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம் அல்லது கைத்தொலைபேசி இலக்கம். உங்கள் பெயர் அல்லது புனை பெயர் கட்டணம் செலுத்தப்பட்ட பின் உறுதி செய்த இலக்கம் அல்லது பற்றுச்சீட்டு.
எவ்வாறு பணம் செலுத்துவது?
- Bank Payment
- Credit Card, Debit Card,
- Credit Card, Debit Card, Western Union, money gram, online payment ஆகிய வழிகளில் பணத்தை செலுத்த முடியும்.
- தொலைபேசியில் செலுத்த முடியும்
- இப்பக்கத்திலுள்ள விலைவிபரத்திற்கு கீழ் Order என்பதை அழுத்தி எந்த வகையில் பணம் செலுத்த விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்து செலுத்தமுடியும்.
எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?
- அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை PHOTO எடுத்து மின்னஞ்சல் அல்லது வட்ஸ்அப் ஊடாக அனுப்பி விடலாம்
- thuyarpahirvu@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது (+94) 0764881117, (+33) 06 05 90 92 70 என்கின்ற WhatsApp இலக்கங்கள் ஊடாகவோ புகைப்படம் மற்றும் தகவல்களை அனுப்பி வைக்கலாம். புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் அல்லது வட்ஸ்அப் வழியாக அனுப்ப முடியும்உங்களிடத்தில் Scan & Fax வசதிகள் இல்லை என்றால்கூட எமது புதிய சேவையான தொலைபேசி வழியாக நீங்கள் தகவலை வாசித்து Record செய்யலாம். இது தொடர்பாக எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முகவரின் உதவியை நாடவும்.
கால அளவு
- அறிவித்தலின் விபரங்களின் உண்மைத்தன்மையை நாம் உறுதிப்படுத்திய பின்னரே காட்சிப்படுத்தப்படும்.
- நீங்கள் அறிவித்தல் தொடர்பான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்தபின்னரே அவை எமக்கு கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து 30 நிமிடங்கள் முதல் 6 மணித்தியாலங்களுக்குள் காட்சிப்படுத்தப்படும். காட்சிப்படுத்த தேவைப்படும் நேரம்: 60 நிமிடம்
- நீங்கள் எமக்கு வழங்கிய தகவலின்படி உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் காட்சிப்படுத்தும் நேரம் அதிகரிக்கலாம்.
திருத்தம் செய்வது எப்படி?
- காட்சிப்படுத்திய பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்.
தகவல் தருபவருக்கு எம்மால் பாதுகாப்பு இலக்கம் ஒன்று அனுப்பப்படும், அவ் இலக்கத்தை எமக்கு தருவதன் மூலம் அறிவித்தலை திருத்திக்கொள்ள முடியும்.
இல்லையெனில் அறிவித்தல் அனுப்பட்ட தொடர்பு முறையிலிருந்து இருந்து எமக்கு திருத்தம் செய்வதற்குரிய தகவல்களை தருகையில் திருத்தம் செய்யலாம். - நீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய அறிவித்தல்கள் எம்மால் திருத்திக்கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பினால் அதனை மாற்றிக் கொள்ளலாம். காட்சிப்படுத்திய நாட்களை அதிகரிக்க / மீளப் காட்சிப்படுத்த அறிவித்தலின் நாட்களை நீடிக்க எம்மை தொடர்பு கொண்டு நீடித்துக் கொள்ள முடியும். 2.அறிவித்தல் கால அளவு முடிவதற்கு முன்னர் அதிகரிப்பது என்றால் மட்டுமே அதிகரிக்க முடியும்.
- அறிவித்தல் காலம் முடிவடைந்திருந்தாலும் அதனை மீள காட்சிப்படுத்தலாம், அறிவித்தல் நிறுத்தப்பட்டு இருந்தால் மீளப் பிரசுரிக்க வேண்டுமெனில் பணம் செலுத்தப்பட்டு சிறு நேரத்திலையே மீண்டும் காட்சிப்படுத்தலாம்.Terms & Conditions அறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது. நீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் அறிவித்தலில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது. அறிவித்தலில் விளம்பரம் அனுமதிக்கப்பட மாட்டாது. நீங்கள் வடிவமைத்து அனுப்பிய அறிவித்தல் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும் நீங்கள் வடிவமைத்த அறிவித்தல் எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையெனில் நாம் எமது வழமையான வடிவத்திலேயே காட்சிப்படுத்தப்படும்.எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தால் அல்லது உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தால் அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்.தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் காட்சிப்படுத்தலில் தாமதம் ஏற்படலாம்.தொழிநுட்பச் சிக்கல் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, அறிவித்தல் வேலைசெய்யவில்லை என்றால் அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும் நீங்கள் அனுப்பி காட்சிப்படுத்திய அறிவித்தலுக்கு முழுப் பொறுப்பு உங்களுடையது. உங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய உங்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலைமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் ID Card அல்லது Passport Copy, Billing Proof இப்படியான ஆவணங்களை நாம் பெற்றுக்கொள்ள நேரிடும்